Friday, June 17, 2011

Rss Feed Tweeter button Facebook button Linkedin button Digg button Tweeter button Youtube button தலைப்பு செய்தி >> சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை ஆராய சாரங்கி தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்தது தமிழக அரசு! சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை ஆராய சார

சென்னை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சமச்சீர் கல்வியின் தரம் குறித்து ஆய்வு செய்ய தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவை இன்று தமிழக அரசு அமைத்தது. குழுவில் மத்திய இடைநிலை கல்வி வாரிய முன்னாள் தலைவர் ஜி.பாலசுப்ரமணியன், சென்னை லேடி ஆண்டாள் பள்ளி முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி, டி.ஏவி பள்ளி நிறுவனர் சி.ஜெயதேவ், பேராசியர் ஒய்.ஜி.பார்த்தசாரதி, பேராசியர் பி.கே.திரிபாதி, பேராசியர் அனில் சேத்தி, பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வசுந்திரா தேவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதாக அறிவித்து சட்டசபையில் சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தமிழக அரசின் சமச்சீர் கல்வி குறித்தான சட்டத் திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், '1 மற்றும் 6&ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர வேண்டும். மற்ற வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வியின் தரத்தை ஆய்வு செய்து இரண்டு வாரத்தில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீது ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கூறியது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று முன்தினம் எந்த பாட திட்டம் என்பது தெரியாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர். இறுதி உத்தரவு வரும்வரை வகுப்புகளில் மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் இலக்கணம் மற்றும் பொது கணக்கு பாடங்களை நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

சாரங்கி தலைமையிலான நிபுணர் குழு

இதனையடுத்தது, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை பற்றி ஆராய தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையிலான ஒன்பது பேர்கொண்ட குழு இன்று அறிவிக்கப்பட்டது. குழுவில் மத்திய இடைக்கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன், லேடி ஆண்டாள் மெட்ரிக்பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி ஸ்ரீனிவாசன், டி.ஏவி பள்ளி நிறுவனர் சி.ஜெயதேவ், பத்மசேஷாத்ரி பள்ளியின் முன்னாள் இயக்குனர்  ஒய்.ஜி.பார்த்தசாரதி, டில்லி தேசிய கல்வி அறிவியல் மறறும் கணிதவியல் துறை பேராசிரியர் பி.கே.திரிபாதி, சமூக அறிவியல் துறை பேராசிரியர் அனில் சேத்தி, பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வசுந்திரா தேவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குழுவின் வேலை என்ன?

தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையிலான 9 பேர் கொண்ட குழு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை ஆராய்ந்து, இரண்டு வாரத்தில் சமச்சீர் கல்வி தரத்தை ஆய்வு செய்து அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படியே சமச்சீர் கல்வி தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.

--
Thank you

Jeyasithar R ( UCO India IT Services )




No comments:

Post a Comment